Home One Line P2 கொவிட்19: சிங்கப்பூரில் புதிதாக 614 சம்பவங்கள் பதிவு

கொவிட்19: சிங்கப்பூரில் புதிதாக 614 சம்பவங்கள் பதிவு

600
0
SHARE
Ad

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இன்று வெள்ளிக்கிழமை கூடுதலாக 614 கொவிட்19 நோய்த்தொற்று சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவை வெளிநாட்டினர் தங்குமிடங்களில் உள்ள தொழிலாளர்கள் சம்பந்தப்பட்டவையாகும்.

இந்த புதிய சம்பவங்கள் குடியரசின் மொத்த எண்ணிக்கையை 30,426- ஆகக் கொண்டு வந்துள்ளது.

சிங்கப்பூர் குடிமக்கள் அல்லது நிரந்தர குடியிருப்பாளர்கள் சம்பந்தப்பட்டவை நான்கு சம்பவங்கள் மட்டுமே என்று தரவுகள் காட்டுகின்றன.

#TamilSchoolmychoice

வியாழக்கிழமை நிலவரப்படி, மொத்தம் 12,117 பேர் இந்த தொற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டுள்ளதாகவும், மருத்துவமனைகள் அல்லது சமூக பராமரிப்பு வசதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.