இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட் 19 பாதிப்புகள் எண்ணிக்கை 7,185 ஆக உயர்ந்தது.
புதிதாக அடையாளம் காணப்பட்ட 48 பாதிப்புகளில் 4 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களாவர். 44 பேர் உள்நாட்டில் தொற்று கண்டவர்கள். இவர்களில் 25 பேர் வெளிநாட்டினர். அந்த 25 பேர்களில் 21 பேர் செமினி குடிநுழைவு தடுப்பு முகாமில் இருப்பவர்களாவர்.
தொற்று பீடிக்கப்பட்டவர்களில் குணமடைந்தவர்களின் விழுக்காடு 82.3 % ஆக இருப்பதாகவும் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.
தற்போது நாடெங்கிலும் 1,158 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீவிரக் கண்காணிப்பு சிகிச்சைப் பிரிவில் 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 5 பேர் சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த ஒருநாளில் மரணம் ஏதும் நிகழவில்லை. இதுவரையிலான மொத்த மரண எண்ணிக்கை 115 ஆக இருந்து வருகிறது.