Home One Line P2 நடிகை வாணிஸ்ரீயின் மகன் திடீர் மரணம்! தற்கொலை செய்து கொண்டாரா?

நடிகை வாணிஸ்ரீயின் மகன் திடீர் மரணம்! தற்கொலை செய்து கொண்டாரா?

1436
0
SHARE
Ad

சென்னை – பிரபல நடிகை வாணிஸ்ரீயின் 36  வயது மகன் அபினய் வெங்கடேஷ்  கார்த்திக் திடீரென மரணமடைந்திருப்பது தமிழ் – தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முதன் முதலாக உயர்ந்த மனிதன் படம் வாயிலாக தமிழ் திரையுலகில் நுழைந்த வாணிஸ்ரீ அதன் பின்னர் பல படங்களில் சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து புகழ் பெற்றார். தெலுங்கிலும் பிரபல நடிகையாக உலா வந்தார்.

இடையில் திருமணமாகி கொஞ்சகாலம் திரையுலகில் இருந்து ஒதுங்கி இருந்தார்,

#TamilSchoolmychoice

அண்மையில் மீண்டும் நடிக்க வந்த அவர் சில படங்களிலும் தொலைக் காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார்.

வாணிஸ்ரீயின் மகன் அபினய் மருத்துவராகப் பணியாற்றி வந்தார்.

வெள்ளிக்கிழமை (மே 22) இரவு அவர் இறந்தார் என்றும் அவர் இறந்தது நேற்று சனிக்கிழை காலையில்தான்  அவரது குடும்பத்தினருக்கே தெரிய வந்ததாகவும் கூறப்படுகிறது.

நேற்று சனிக்கிழமை அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்று முடிந்தன.

வாணிஸ்ரீயின் மகன் கார்த்திக்கிற்கு இரண்டாவது குழந்து பிறந்து சில மாதங்களே ஆகியுள்ள நிலையில் இந்த மரணம் நிகழ்ந்திருப்பதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாணிஸ்ரீக்கு இன்னொரு மகளும் உண்டு. அனுபமா என்ற அவரும் ஒரு மருத்துவர்தான்.

வாணிஸ்ரீயின் இரண்டு பிள்ளைகளுக்கும் இடையில் சொத்து பிரிப்பதில் தகராறுகள் ஏற்பட்டதாகவும், அப்பா-மகன் ஒரு பக்கம், அம்மா-மகள் இன்னொரு பக்கம் என குடும்பத்தினருக்கிடையே பிளவுகள் இருந்ததாகவும், அதன் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாகவே அபிநய் தற்கொலை செய்து கொண்டார் என்றும் ஊடகங்கள் தெரிவித்தன.