Home One Line P1 மலேசியாவில் கொவிட்-19 : புதிய பாதிப்புகள் 60; மரணம் ஏதுமில்லை

மலேசியாவில் கொவிட்-19 : புதிய பாதிப்புகள் 60; மரணம் ஏதுமில்லை

630
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 60 புதிய கொவிட்-19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அறிவித்தார்.

எனினும் மரணங்கள் ஏதும் நிகழவில்லை. பாதிப்புகளின் எண்ணிக்கை கட்டுக்குள் இருந்தாலும், மூன்று குடிநுழைவு தடுப்பு முகாம்களில் கொவிட்-19 புதிய தொற்றுகள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.

இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட் 19 பாதிப்புகள் எண்ணிக்கை 7,245 ஆக உயர்ந்தது.

#TamilSchoolmychoice

புதிதாக அடையாளம் காணப்பட்ட 60 பாதிப்புகளில் 6 பாதிப்புகள் சிப்பாங்கிலுள்ள குடிநுழைவு தடுப்பு முகாமில் அடையாளம் காணப்பட்டன. புதிதாக அடையாளம் காணப்பட்டிருக்கும் கொவிட்-19 தொற்று குழுமம் சிப்பாங் முகாமாகும்.

இதே போன்று செமினி குடிநுழைவு தடுப்பு முகாமில் 49 பாதிப்புகளும், புக்கிட் ஜாலில் குடிநுழைவு தடுப்பு முகாமில் 60 பாதிப்புகளும் சிப்பாங் முகாமில் 7 பாதிப்புகளும் இதுவரையில் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் 33 பேர் குணமடைந்து இல்லம் திரும்பியிருக்கின்றனர். இதைத் தொடர்ந்து 5,945 பேர் இதுவரையில் குணமடைந்திருக்கின்றனர்.

தற்போது நாடெங்கிலும் 1,185 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீவிரக் கண்காணிப்பு சிகிச்சைப் பிரிவில் 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 4 பேர் சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதுவரையிலான மொத்த மரண எண்ணிக்கை 115 ஆக இருந்து வருகிறது.