Home One Line P2 விஜய் சேதுபதி – ரங்கராஜ் பாண்டே இணையும் “க/பெ ரணசிங்கம்”

விஜய் சேதுபதி – ரங்கராஜ் பாண்டே இணையும் “க/பெ ரணசிங்கம்”

1131
0
SHARE
Ad

சென்னை – தமிழ் திரையுலகம் நிலைகுத்தி நின்றிருக்கும் நிலையில் அடுத்தடுத்த படங்கள் எப்போது திரைக்கு வரும் என்ற அறிகுறிகள் கூட இதுவரை தென்படவில்லை. இந்நிலையில் தனது அடுத்த படத்திற்கான முன்னோட்டத்தை வெளியிட்டிருக்கிறார் விஜய் சேதுபதி.

“க/பெ ரணசிங்கம்” என்ற வித்தியாசமான பெயரோடு வெளிவரவிருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதியோடு நடித்திருக்கும் இன்னொரு பிரபலம் ரங்கராஜ் பாண்டே ஆவார். தந்தி தொலைக்காட்சி செய்தி அலைவரிசையின் மூலம் மிகவும் பிரபலமான ரங்கராஜ் பாண்டே தற்போது சாணக்கியா தொலைக்காட்சி என்ற பெயரில் இணையத் தொலைக்காட்சி ஒன்றை நடத்தி வருகிறார்.

“நேருக்கு நேர்” படத்தில் அஜித் குமாரோடு இணைந்து வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்தார் பாண்டே. ரணசிங்கம் படத்திலும் மாவட்ட ஆட்சியராக முக்கியக் கதாபாத்திரத்தில் பாண்டே நடிக்கிறார்.

#TamilSchoolmychoice

விருமாண்டி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதியோடு கதாநாயகியாக இணைபவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

ரணசிங்கம் படத்தின் முன்னோட்டம் யூடியூப் தளத்தில் கடந்த மே 23-ஆம் தேதி பதிவேற்றப்பட்டது. வெளியான இரண்டு நாட்களிலேயே 2.9 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது ரணசிங்கம்.

ஆனால் கொவிட்-19 பிரச்சனைகளால் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியாத நிலையில் ரணசிங்கம் எப்போது திரைக்கு வரும் என்பது அறிவிக்கப்படவில்லை.

ரணசிங்கம் படத்தின் முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் யூடியூப் இணையத் தளத்தில் காணலாம்: