Home இந்தியா ரங்கராஜ் பாண்டே தந்தையார் மறைவு – ஸ்டாலின் நேரில் அனுதாபம்

ரங்கராஜ் பாண்டே தந்தையார் மறைவு – ஸ்டாலின் நேரில் அனுதாபம்

431
0
SHARE
Ad

சென்னை : தமிழ்நாட்டின் பிரபல பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டேயின் தந்தையார் ரகுநாதாச்சார்யா என்கிற ராம்சிங்ஹாசன் பாண்டே காலமானார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரின் இல்லத்திற்கு நேரில் வருகை தந்து ரங்கராஜ் பாண்டேவுக்கு அனுதாபம் தெரிவித்துக் கொண்டார்.

“தந்தையாரை இழந்து வாடும் ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே அவர்களையும் அவரது குடும்பத்தாரையும் சந்தித்து எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன்” என்றும் ஸ்டாலின் தன் முகநூலில் படங்களுடன் பதிவிட்டார்.