தெலுங்கானா ஆளுநரும், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவருமான தமிழிசை சௌந்திரராஜனும் தொலைபேசி வழி பன்னீர் செல்வத்துடன் உரையாடி நலம் விசாரித்தார் என ஊடகங்கள் தெரிவித்தன.
ஞாயிற்றுக்கிழமை மாலையில் சென்னையிலுள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்ட பன்னீர் செல்வம் மீதான பரிசோதனைகள் முடிந்ததும் அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேறுவார் என மருத்துவமனையின் தகவல் அறிக்கை தெரிவித்தது.
மற்ற சில அமைச்சர்களும், அதிமுக பிரமுகர்களும் பன்னீர் செல்வத்தை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தனர் என்றும் ஊடகங்கள் தெரிவித்தன.