இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்-19 பாதிப்புகள் எண்ணிக்கை 7,604 ஆக உயர்ந்தது.
இந்தத் தகவல்களை வெளியிட்ட சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம், புதிதாக அடையாளம் காணப்பட்ட 187 பாதிப்புகளில் 155 பேர் புக்கிட் ஜாலில் குடிநுழைவு முகாமில் அடையாளம் காணப்பட்டவர்கள் எனவும் தெரிவித்தார்.
செராசில் பாதுகாவல் தொழிலாளர்களிடையே காணப்பட்ட ஒரு புதிய தொற்று குழுமத்தில் 13 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
177 பேர் உள்நாட்டில் தொற்று பீடிக்கப்பட்டவர்கள் ஆவர். இவர்களில் 173 பேர் வெளிநாட்டினர் எஞ்சிய நால்வர் மலேசியர்களாவர்.
பாதிப்புகளின் எண்ணிக்கை உயர்ந்தாலும், தொடர்ந்து மூன்றாவது நாளாக மரணங்கள் ஏதும் நிகழவில்லை என்பது ஆறுதலான ஓர் அம்சமாகும்.
கடந்த 24 மணி நேரத்தில் 62 பேர் குணமடைந்து இல்லம் திரும்பியிருக்கின்றனர். இதைத் தொடர்ந்து மொத்தம் 6,041 பேர் இதுவரையில் குணமடைந்திருக்கின்றனர்.
தற்போது நாடெங்கிலும் 1,448 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீவிரக் கண்காணிப்பு சிகிச்சைப் பிரிவில் 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 5 பேர் சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளனர்.