Home One Line P2 கொவிட்-19 : அமெரிக்காவில் மரண எண்ணிக்கை 100,000-ஐ நெருங்கியது

கொவிட்-19 : அமெரிக்காவில் மரண எண்ணிக்கை 100,000-ஐ நெருங்கியது

541
0
SHARE
Ad

வாஷிங்டன் – அமெரிக்காவில் கொவிட்-19 தொற்றால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 99,470-ஆக உயர்ந்திருக்கிறது.

தற்போது நீடித்து வரும் நிலையில் மரண எண்ணிக்கை தொடர்ந்தால் அடுத்த சில நாட்களில் எளிதாக இந்த எண்ணிக்கை 100,000 -ஐத் தாண்டும் என கணிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் கொவிட்-19 தொற்றுக்கான தடுப்பு மருந்து எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வருவது சாத்தியமே என தொற்று நோய் நிபுணர்கள் நம்புகின்றனர்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் கடந்த சில மாதங்களாக மின்னியல் (electronic) வாயிலாக மட்டும் நடத்தப்பட்டு வந்த நியூயார்க் பங்குச் சந்தை பரிமாற்றங்கள் இன்று முதல் வழக்கமான இயல்பு நிலைமைக்குத் திரும்பின.

கொவிட்-19 தொற்றுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைகளை அமுல்படுத்த அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்னும் மறுத்து வருகிறார்.

நாட்டை இயல்பு நிலையில் வைத்துக் கொண்டே கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போர் தொடரும் எனவும் அவர் அறிவித்திருக்கிறார்.

பெரும்பாலும் அவரது அணுகுமுறை காரணமாகவே அமெரிக்காவில் கொவிட்-19 தொடர்பான மரண எண்ணிக்கைகள் உயர்ந்திருப்பதாக அவருக்கு எதிரான கண்டனங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

இதற்கிடையில் கடந்த சில நாட்களாக தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கொவிட்-19 பாதிப்புகள் அதிகரித்துள்ளன. இதனைத் தொடர்ந்து கடந்த 14 நாட்களாக பிரேசிலில் தங்கியிருந்தவர்களை அமெரிக்காவில் நுழைவதற்குத் தடைவிதிக்கும் நடைமுறையை அமெரிக்கா அறிவித்திருக்கிறது.