Home One Line P2 கொவிட்19: உலகளவில் 350,000-க்கும் மேற்பட்டோர் மரணம்

கொவிட்19: உலகளவில் 350,000-க்கும் மேற்பட்டோர் மரணம்

508
0
SHARE
Ad

வாஷிங்டன்: கொரொனா தொற்றினால் உலகளாவிய இறப்பு எண்ணிக்கை செவ்வாயன்று 350,000- ஐத் தாண்டியதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அனடோலு ஏஜென்சி படி, பல்கலைக்கழகத்தால் தொகுக்கப்பட்ட இத்தகவல்கள் உலகளவில் இறப்புகளின் எண்ணிக்கையை 350,423-ஆகப் பதிவு செய்துள்ளது. இந்நோயிலிருந்து சுமார் 2.28 மில்லியன் மக்கள் மீண்டு வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

உலகளவில் 5.58 மில்லியனுக்கும் அதிகமான சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. பல்கலைக்கழகத்தின்படி, அமெரிக்காவில் இதுவரை 1.68 மில்லியனுக்கும் அதிகமான சம்பவங்கள் பதிவாகி, உலகில் அதிக தொற்றுநோய்களைக் கொண்ட நாடாக திகழ்கிறது.

#TamilSchoolmychoice

லத்தீன் அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையிலான கொவிட்-19 சம்பவங்கள் மற்றும் இறப்புகளைக் கொண்ட பிரேசில், உலகளவில் 391,222 சம்பவங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

டிசம்பர் மாதம் சீனாவின் வுஹானில் முதன்முதலில் தோன்றியதிலிருந்து இந்த தொற்றுநோய் 188 நாடுகளுக்கு பரவியுள்ளது.