கோலாலம்பூர்: பெண்கள், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் ரீனா ஹாருண் பதவி விலகுவதாக இருந்த ஊகங்களை மறுத்துள்ளார்.
பதவி விலகல் ஊகங்களுடன் தொடர்புடைய பெர்சாத்து அமைச்சர்களில் ரீனாவும் அடங்குவார்.
“இப்போது வரை, நான் பெர்சாத்து கட்சியின் உறுப்பினர், பெர்சாத்து மகளிர் தலைவர் மற்றும் பிரதமராகவும், கட்சியின் தலைவராகவும் மொகிதின் யாசின் தலைமையை ஆதரிக்கிறேன்.” என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கொவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில், அரசியல் முரண்பாடுகளை விட மக்கள் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் ரினா வலியுறுத்தினார்.
மொகிதினின் முகாமில் இருந்து நியமிக்கப்பட்ட பெர்சாத்து பொதுச் செயலாளர் ஹம்சா சைனுடினுடன் தங்கும் விடுதிக்கு வந்த பல தலைவர்களில் ரீனாவும் இருந்தார்.
பிப்ரவரி மாதம் நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து பெர்சாத்து வெளியேறியதை அடுத்து, கட்சிக்குள் அமைதியின்மையை ஏற்பட்டது.