Home One Line P1 சட்ட மறுஆய்வு செய்யப்படும் வரை மதுபான உரிமங்கள் நிறுத்தப்பட வேண்டும்- அனுவார் மூசா

சட்ட மறுஆய்வு செய்யப்படும் வரை மதுபான உரிமங்கள் நிறுத்தப்பட வேண்டும்- அனுவார் மூசா

531
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வழிகாட்டல் மற்றும் சட்ட மறுஆய்வு செய்யப்படும் வரை புதிய மதுபான உரிமங்களை வழங்குவது இடைநிறுத்தப்பட வேண்டும் என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் அனுவார் மூசா தெரிவித்தார்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர் சம்பந்தப்பட்ட சாலை விபத்தைத் தொடர்ந்து அம்னோ உச்சமன்றக் குழுத் தலைவர் இதனைத் தெரிவித்தார்.

“குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் விபத்துக்கள் ஏற்படுவதால், ஒரு வழிகாட்டுதல் மற்றும் சட்ட மறுஆய்வு செய்யப்படும் வரை மதுபானங்களை விற்க புதிய உரிமத்தை வழங்கக்கூடாது.” என்று அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு இன்னும் கடுமையான தண்டனைகளை விதிக்க சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று பலர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.

மே 29 அன்று, பிரதமர் துறை அமைச்சர் தக்கியுடின் ஹாசன் இதுபோன்ற வழக்குகள் குறித்து உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை அறிவித்தார்.

போக்குவரத்து அமைச்சினால் இறுதி செய்யப்பட்ட சாலை போக்குவரத்து சட்டம் 1987 (சட்டம் 333)- இல் முன்மொழியப்பட்ட திருத்தம் அடுத்த நாடாளுமன்ற அமர்வுக்கு கொண்டு வரப்படுவதை உறுதி செய்ய உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தக்கியுடின் கூறினார்.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்குமாறு பிரதமர் மொகிதின் யாசின் போக்குவரத்து அமைச்சகத்திற்கு அண்மையில் உத்தரவிட்டார்.