Home One Line P1 வீட்டிற்கு அழைத்து முடிதிருத்துவதற்கும் அனுமதி இல்லை! -சப்ரி யாகோப்

வீட்டிற்கு அழைத்து முடிதிருத்துவதற்கும் அனுமதி இல்லை! -சப்ரி யாகோப்

524
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட்19 நோய்த்தொற்று உள்ளூர்வாசிகளிடையே குறைந்துள்ள நிலையிலும் முடிதிருத்தும் கடை செயல்பட அரசாங்கம் இன்னும் அனுமதிக்கவில்லை.

இதற்கிடையில், பொது மக்கள் மற்றும் முடிதிருத்தும் கடை உரிமையாளர்களின் புகார்களின் பேரில், தேசிய பாதுகாப்பு மன்றம் மற்றும் சுகாதார அமைச்சகம் இதற்கான நிர்ணயிக்கப்பட்ட நடைமுறையை தயார் செய்து வருவதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

“முடிதிருத்தும் கடைகள் இயங்க அனுமதிக்கப்படவில்லை. நிர்ணயிக்கப்பட்ட நடைமுறை தயாரிக்கப்படுகிறது”

#TamilSchoolmychoice

“இதுவரையிலும், இன்னும் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறை விவாதிப்பதற்கு தயாராகவில்லை. தயாராக இருக்கும்போது அதை முன்வைப்போம். அதன் பிறகே, வழங்கப்பட்ட நடைமுறைக்கு ஏற்ப திறக்கலாமா, இல்லையா, மற்றும் தேதி தீர்மானிக்கப்படும்.” என்று அவர் கூறினார்.

“அதுவரை வீட்டில் உட்பட எல்லா இடங்களிலும் முடிதிருத்துவது தடை செய்யப்பட்ட பட்டியலில் உள்ளது.” என்று இன்று திங்களன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.