கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், நம்பிக்கைக் கூட்டணியை விட்டு வெளியேற ஒருபோதும் ஒப்புக் கொள்ளவில்லை, ஏனெனில் அக்கூட்டணி நஜிப் ரசாக்கை வெற்றிகரமாக வெளியேற்றியது.
துன் மகாதீர், அம்னோ மற்றும் பாஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் முன்னாள் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி ஆகியோர் அமர்ந்திருக்கும் படங்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் போது மகாதீர் இவ்வாறு கூறினார்.
ஒரு புதிய கூட்டணியை உருவாக்கி, இந்த விஷயத்தை மாமன்னருக்கு தெரிவிக்க பெர்சாத்துவின் உச்சமன்றக் குழு ஒருமனதாக முடிவெடுத்ததைத் தொடர்ந்து இந்த கூட்டம் நடைபெற்றது என்று அவர் கூறினார்.
இருப்பினும், இந்த விஷயத்தை பரிசீலிக்க விரும்பியதாக அவர் கூறினார்.
“இறுதியாக அவர்கள் எனக்கு நேரம் கொடுக்க ஒப்புக்கொண்டார்கள். மொகிதின் ஒரு முடிவை எடுக்க எனக்கு ஒரு வாரம் கால அவகாசம் கொடுத்தார்.
“இருப்பினும், அவர்கள் ஏற்கனவே நம்பிக்கைக் கூட்டணியை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது,” என்று அவர் கூறினார்.
இந்த முன்மொழிவுக்கு ஒப்புக் கொள்ள மொகிதின் அவரைப் பார்க்க பல முறை வந்ததாக மகாதீர் தெரிவித்தார்.
“நான் அவரை நிராகரிக்கவில்லை, நான் அதைப் பற்றி யோசிப்பேன் என்று சொன்னேன்.
“ஆனால் நான் வெளியேற ஒப்புக்கொள்ளவில்லை, ஏனென்றால் அந்த நேரத்தில் நான் நம்பிக்கைக் கூட்டணி நஜிப்பை (ரசாக்) வெளியேற்றுவதற்கான போராட்டத்தில் வெற்றி கண்டது. எனவே நஜிப்பை வீழ்த்த உதவிய பெர்சாத்து, மீண்டும் அவருடன் பணியாற்ற முன்மொழியப்படுவது சற்று விசித்திரமானது.” என்று அவர் கூறினார்.