Home One Line P1 அதிகார அத்துமீறல் காரணமாக முன்னாள் அமைச்சர் மீது எம்ஏசிசியில் புகார்

அதிகார அத்துமீறல் காரணமாக முன்னாள் அமைச்சர் மீது எம்ஏசிசியில் புகார்

515
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் அமைச்சர் ஒருவர் அரசாங்கத்தில் இருந்தபோது தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இன்று இரண்டு புகார் அறிக்கைகளைப் பெற்றது.

கோலாலம்பூர் பெர்சாத்து இளைஞர் பிரிவுத் தலைவர் சாஹின் சைனால் மற்றும் தேசிய நெகிரி செம்பிலான் இளைஞர் ஒருங்கிணைப்பாளர் டத்தோஸ்ரீ சஞ்சீவன் ராமகிருஷ்ணன் ஆகியோர் இங்குள்ள எம்ஏசிசி தலைமையகத்தில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

“எங்களிடம் உறுதியான சான்றுகள் உள்ளன. நாங்கள் வைத்திருக்கும் ‘திடமான’ விஷயங்கள் எதுவும் இல்லை என்றால், நாங்கள் இங்கே இருக்க மாட்டோம். அதிகாரிகளுக்கு சுமையாக இருக்க மாட்டோம்.” என்று சாஹின் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு முன்பு செய்தியாளர்களிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

எம்ஏசிசி அதிகாரி இரண்டு அறிக்கைகளையும் பெற்றதாக உறுதிப்படுத்தினார்.