Home One Line P1 வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் கொள்கையில் மாற்றம் செய்யப்படும்

வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் கொள்கையில் மாற்றம் செய்யப்படும்

721
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட்19-க்குப் பிந்தைய நடவடிக்கைகளில் வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் கொள்கையிலும், சட்டவிரோதமாக குடியேறியவர்களின் கட்டுப்பாட்டிலும் நாடு குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்யும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

மலேசியாவிலும் சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளிலும் அதிகரித்து வரும் கொவிட்19 சம்பவங்களுக்கு முக்கியக் காரணமாக இருப்பது வெளிநாட்டவர்கள் என்பதை காணப்பட்டதைத் தொடர்ந்து இக்கொள்கை திருத்தப்பட வேண்டிய நேரம் இது என்று அவர் கூறினார்.

“வெளிநாட்டினரை பணியமர்த்தும் கொள்கையிலும், சட்டவிரோதமாக குடியேறுபவர்களைத் தடுக்கும் கொள்கையிலும் ஒரு பெரிய மாற்றம் இருக்கும்.” என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

மேலும், கொவிட் 19 பாதித்ததால் சுற்றுலாத் துறை உள்ளிட்ட பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது, இதனால் பல தங்கும் விடுதிகளும் தொழிற்சாலைகளும் மூடப்பட்டு தொழிலாளர்கள் நிறுத்தப்படுவதால் வேலையின்மை அதிகரித்துள்ளது.

கொவிட்19- க்கு பிந்தைய பொருளாதார மீட்சி மெதுவாக இருக்கலாம் என்று சுட்டிக்காட்டிய அவர், வெளிநாட்டினரை விட நாட்டில் பணிபுரியும் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிப்பதே அரசாங்கத்தின் கொள்கையாக இருக்கும் என்று தெரிவித்தார்.