Home One Line P1 கட்சிக் குறிக்கோள், கொள்கைக்கு ஏற்ப தேசிய கூட்டணியில் இணைந்தது சரியே- ஹாம்சா

கட்சிக் குறிக்கோள், கொள்கைக்கு ஏற்ப தேசிய கூட்டணியில் இணைந்தது சரியே- ஹாம்சா

503
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நேற்று வியாழக்கிழமை நடந்து முடிந்த பெர்சாத்துவின் உட்டமன்றக் கூட்டத்தில் அமைப்பு செயலாளராக முகமட் சுஹாமி யஹ்யாவின் நியமனம் செல்லுபடியாகுமென்று தீர்மானிக்கப்பட்டதாகவும், அதனால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட துன் மகாதீர் முகமட் மற்றும் நால்வரின் வெளியேற்றத்தை உச்சமன்றக் குழு ஒருமனதாக ஏற்றுக் கொண்டதாகவும் பொதுச் செயலாளர் டத்தோ ஹம்சா சைனுடின் தெரிவித்தார்.

மேலும், தேசிய கூட்டணியுடன் இணைவது குறித்த பெர்சாத்துவின் முடிவு, கட்சியின் குறிக்கோள் மற்றும் அடிப்படைக் கொள்கைகளுக்குள் அடங்கியிருப்பதாக அவர் கூறினார்.

இதனிடையே, துன் டாக்டர் மற்றும் நால்வரின் நீக்கம் குறித்த  விஷயத்தை  ஹம்சா சைனுடின் தெளிவுபடுத்தினார்.

#TamilSchoolmychoice

டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர், சைட் சாதிக், டத்தோ அமிருடின் ஹம்சா மற்றும் டாக்டர் மஸ்லீ மாலிக் ஆகியோரின் உறுப்பியங்கள், கட்சி அரசியலமைப்பு விதிமுறைகளைப் பின்பற்றி நிறுத்தப்பட்டதாகக் கூறினார்.

“துன் டாக்டர் மகாதிர் முகமட், டத்தோ முக்ரிஸ் மகாதிர், சைட் சாதிக், டத்தோ வீரா அமிருடின் ஹம்சா மற்றும் டாக்டர் மஸ்லீ மாலிக் ஆகியோரின் உறுப்பினர் பெர்சாத்து அரசியலமைப்பின் பிரிவு 10.2.2 மற்றும் 10.2.3-இன் படி உடனடியாக நிறுத்தப்பட்டது என்பதையும் உச்சமன்றக் கூட்டம் உறுதிப்படுத்தியது.”

“கூட்டத்தில், பிப்ரவரி 24 அன்று துன் டாக்டர் மகாதீர் முகமட்  பெர்சாத்துவின் தலைவராக பதவி விலகியதைத் தொடர்ந்து, பெர்சாத்து அரசியலமைப்பின் பிரிவு 16.9- இன் படி டான்ஸ்ரீ மொகிதின் யாசின் செயல் தலைவராக முன்மொழியப்பட்டதை உச்சமன்றக் குழு அங்கீகரிக்கிறது.” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

நேற்று இரவு, நடைபெற்ற பெர்சாத்து உச்சமன்றக் குழு  கூட்டத்திற்கு மொகிதின் தலைமை தாங்கினார்.