Home One Line P1 ஜூன் 4 நடைபெற்ற பெர்சாத்து கூட்டம் சட்டப்பூர்வமானது – சங்கப் பதிவு இலாகா

ஜூன் 4 நடைபெற்ற பெர்சாத்து கூட்டம் சட்டப்பூர்வமானது – சங்கப் பதிவு இலாகா

506
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நேற்று வியாழக்கிழமை பெர்சாத்து தலைவர் டான்ஸ்ரீ மொகீதின் யாசின் தலைமையில் பெர்சாத்துவின் உச்சமன்றக் குழு கூட்டம் நடைபெற்றது.

இருப்பினும், அதன் தலைவர் மொகீதின் யாசின் ஊடகங்களைச் சந்திக்க மறுத்துவிட்டதாகவும், பின்னர் கூட்டம் நடந்த வளாகத்தை விட்டு வெளியேறினார் என்றும் கூறப்பட்டது.

முன்னதாக, டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு ஆதரவான கட்சி உச்சமன்றக் குழு உறுப்பினர்கள் இரண்டு மணி நேர கூட்டங்களுக்குப் பிறகு கட்சிக் கூட்டத்தை விட்டு வெளியேறினர்.

#TamilSchoolmychoice

அபுபக்கர் யஹ்யா, இளைஞர் பிரிவு தகவல்தொடர்புத் தலைவர் உல்யா ஹுசமுடின், அக்ரம்ஷா சனுசி மற்றும் தாரிக் இஸ்மாயில் ஆகியோர் வெளியேறியவர்களில் அடங்குவர்.

கூட்டத்தில் எழுப்பப்பட்ட சில பிரச்சனைகள் குறித்து அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

கட்சிக் கூட்டத்தில் துன் டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் முக்ரிஸ் மகாதீருக்கு அழைப்பு கொடுக்கப்படாதது குறித்து அவர் கேள்வி எழுப்பினர்.

முன்னதாக, நேற்று நடைபெற்ற கூட்டம் சட்டப்பூர்வமானது என்று சங்கப் பதிவு இலாகா தெரிவித்துள்ளது.

பெர்சாத்து கட்சியின் உச்சமன்றக் கூட்டத்தின் விவரங்கள் இன்று வெள்ளிக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்று பெர்சாத்து பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ ஹம்சா சைனுடின் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார்.

நேற்றையக் ​​கூட்டத்தில் கலந்துரையாடல் குறித்த அனைத்து கேள்விகளுக்கும், பத்திரிகையாளர் சந்திப்பில் பதிலளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

“நாங்கள் ஒரு நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டோம், ஒவ்வொன்றாக நாளை (இன்று) நான் விளக்குகிறேன், எளிதாக. நேரம் (பத்திரிகையாளர் சந்திப்பு) நாளை அறிவிக்கப்படும். ” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், பெர்சாத்து உட்டமன்றக் குழு உறுப்பினர் அகமட் பைசால் அசுமு, கூட்டத்திற்குப் பிறகு சந்தித்தபோது, ​​கூட்டம் நல்ல முறையில் நடந்ததாகக் கூறினார்.

“அனைவரும், பிரதமரும் கட்சித் தலைவருக்கும் (மொகிதின்) ஆதரவாக உள்ளனர்.” என்று அவர் கூறினார்.

பெர்சாத்து கட்சியின் உச்சமன்றக் கூட்டத்தின் விவரங்கள் இன்று வெள்ளிக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் அறிவிக்கப்படும்.