Home One Line P1 பதவி விலகிய ஷாருடின் சாலே தேசியக் கூட்டணிக்கு ஆதரவு!

பதவி விலகிய ஷாருடின் சாலே தேசியக் கூட்டணிக்கு ஆதரவு!

553
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஸ்ரீ காடிங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் ஷாருடின் சல்லே நேற்று பொதுப் பணித்துறை துணை அமைச்சர் பதவியிலிருந்து விலகியதை உறுதிப்படுத்தினார்.

இருப்பினும், தாம் இன்னும் தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

பெர்னாமாவிற்கு அனுப்பிய ஒரு குறுஞ்செய்தியில் அவர் பதவி விலகியதை உறுதிபடுத்தி உள்ளார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, தனது பதவி விலகல் குறித்து பரலாகி வந்த செய்தியில், ஷாருடின், தேசிய கூட்டணி அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருப்பதற்கான தனது முடிவு சரியானதல்ல என்று உணர்ந்ததைத் தொடர்ந்து பதவி விலகியதாகவும், அதை சரிசெய்ய விரும்புவதாகவும் அவர் கூறியிருந்தார்.

ஆயினும், மாலையில் அவர் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டை சந்தித்தது குறித்த புகைப்படத்தினை, மகாதீர் தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதற்கிடையில், ஷாருடின் தனது பதவி விலகல் கடிதத்தை பிற்பகல் சமர்ப்பித்ததாக பொதுப் பணித்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ பாடில்லா யூசோப் உறுதிப்படுத்தினார்.