வாஷிங்டன்: கொவிட்19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிவரங்கள்படி, உலகளவில் கொவிட்-19 இறப்புகள் கடந்த 24 மணி நேரத்தில் 6,000 சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்பதைக் காட்டுகின்றன.
இது ஒட்டுமொத்த இறப்பு விகிதத்தை 388,000- க்கும் அதிகமான சம்பவங்களுக்கு கொண்டு வந்துள்ளது.
அமெரிக்காவில் மட்டும் 107,000 இறப்பு சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
பிரேசில், இப்போது பிர்ட்டன் மற்றும் இத்தாலியுடன் இணைகிறது, அந்நாட்டில் இறப்பு விகிதம் 30,000- க்கும் அதிகமாக உள்ளது.
பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் 20,000- க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் மொத்தம் 2.84 மில்லியன் நோயாளிகள் குணமடைந்து வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.