Home One Line P1 நம்பிக்கைக் கூட்டணி பிரதமர் தேர்வு முடிவுற்றது- மார்சுகி யாயா

நம்பிக்கைக் கூட்டணி பிரதமர் தேர்வு முடிவுற்றது- மார்சுகி யாயா

853
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை நேற்றைய சந்திப்பில் முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று புதன்கிழமை பிகேஆர் தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்புக் கூட்டத்தில் துன் டாக்டர் மகாதீர் முகமட், வாரிசான் தலைவர் ஷாபி அப்துல்லா மற்றும் துன் மகாதீருக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பிரதமர் வேட்பாளர் தேர்வு குறித்து பெர்சாத்துவின் தலைவர்களில் ஒருவரான மார்சுகி யாயா செய்தியாளர்களின் நேற்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இருமுறை செய்தியாளர்களிடம் பதில் கூறிய அவர், பிரதமர் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

இதனிடையே, நேற்றைய சந்திப்பில் அனைத்துக் கட்சிகளும் தங்கள் கருத்துகளை தெரிவித்ததாகவும், இதன் முடிவில் முன்னேற்றகரமான கலந்துரையாடல் நடைபெற்றதாகவும் ஓர் அறிக்கை மூலம் அது தெரிவித்தது.

கூட்டணியின் முடிவு குறித்து இன்னும் ஒருவாரத்தில் அறிவிக்கப்படும் என்றும், நேற்றைய சந்திப்புக் கூட்டத்திற்கு பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தலைமை ஏற்றதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.