வாஷிங்டன் : ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவை மேற்கோள் காட்டி, அமெரிக்காவில் கொவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை புதன்கிழமை இரவு இரண்டு மில்லியனைத் தாண்டி 2,000,464-ஐ எட்டியுள்ளது.
அத்தரவுகளின்படி, பலியானவர்களின் எண்ணிக்கையும் 112,924- ஆக அதிகரித்துள்ளது.
380,156 சம்பவங்கள் மற்றும் 30,542 இறப்புகளுடன் நியூயார்க் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூ ஜெர்சி, கலிபோர்னியா, இல்லினாய்ஸ் மற்றும் மாசசூசெட்ஸ் ஒவ்வொன்றும் 100,000- க்கும் மேற்பட்ட சம்பவங்களைப் பதிவு செய்தன.
டி வாஷிங்டன் போஸ்ட்டின் கூற்றுப்படி, ஜூன் மாத தொடக்கத்தில், டெக்சாஸ் மற்றும் கலிபோர்னியா உட்பட அமெரிக்காவின் டஜன் கணக்கான மாநிலங்களில் அதிக கொவிட்-19 சமபவங்கள் பதிவாகி இருந்தன.
ஜார்ஜ் பிளாய்ட் மரணத்திற்கு எதிரான போராட்டத்தின் காரணமாக இந்த உயர்வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.