Home One Line P1 ஜூன் 15 முதல் சிலாங்கூரில் சந்தைகள் செயல்பட அனுமதிக்கப்படும்

ஜூன் 15 முதல் சிலாங்கூரில் சந்தைகள் செயல்பட அனுமதிக்கப்படும்

551
0
SHARE
Ad

ஷா அலாம்: ஜூன் 15 முதல் சிலாங்கூர் மாநிலத்தில் காலை சந்தைகள், திறந்த சந்தைகள், இரவு சந்தைகளை திறக்க அனுமதிக்கப்படும் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

தேசிய பாதுகாப்பு மன்றத்தின் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறை செயல்படுத்தல் மற்றும் அமலாக்கத்தை அடிப்படையாக இது பயன்படுத்தப்படும் என்று அமுருடின் கூறினார்.

“இருப்பினும், சம்பந்தப்பட்ட பகுதிகளின் அடிப்படையில் உள்ளூர் அதிகாரிகள் நடைமுறைகளை சரிசெய்வார்கள்.

#TamilSchoolmychoice

“எந்தவொரு தரப்பும் நடைமுறைகளுடன் முழுமையாக இணங்கத் தவறினால், அது ஆபத்தை விளைவித்தால், அவ்வணிக வளாகங்கள் உடனே மூடப்படும்.” என்று அவர் வியாழக்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

பொருளாதார, சமூக அல்லது பொழுதுபோக்கு என அனைத்து நடவடிக்கைகளும் பாதுகாப்பு மன்றம் நிர்ணயித்துள்ள நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.