Home One Line P2 பங்குச் சந்தையிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் கோடிக்கணக்கில் முதலீடுகளை மீட்டனர்

பங்குச் சந்தையிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் கோடிக்கணக்கில் முதலீடுகளை மீட்டனர்

841
0
SHARE
Ad

கோலாலம்பூர் : கடந்த வாரத்தில் செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரையில் (ஜூன் 9 முதல் ஜூன் 11 வரை) 523.8 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பங்குச் சந்தை முதலீடுகளை அந்நிய முதலீட்டாளர்கள் மீட்டுக் கொண்டுள்ளனர்.

அதற்கு முந்திய வாரத்தில் 1.15 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பங்குச் சந்தை முதலீடுகளை அந்நிய முதலீட்டு நிதிகள் விற்று தங்களின் முதலீடுகளைத் திரும்பப் பெற்றன.

செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் மட்டும் 250.6 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான உள்நாட்டு நிறுவனப் பங்குகளை அந்நிய முதலீட்டாளர்கள் விற்பனை செய்தனர்.

#TamilSchoolmychoice

இருப்பினும் சில வெளிநாட்டு முதலீட்டு நிதிகள் 1.44 மில்லியன் ரிங்கிட் அளவில் பங்குச் சந்தை முதலீடுகளை மேற்கொண்டன.

உள்நாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து கோலாலம்பூர் பங்குச் சந்தையில் ஆர்வத்தோடு ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை மொத்தம் 385.1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பங்குகளை உள்நாட்டு முதலீட்டாளர்கள் வாங்கியிருக்கின்றனர்.

தொடர்ந்து கொண்டிருக்கும் கொவிட்-19 பாதிப்புகள், நிலைத்தன்மையற்ற அரசியல், விரைவில் திடீர் பொதுத் தேர்தல் நடைபெறலாம் என்ற ஊகங்கள் ஆகியவை அந்நிய முதலீட்டாளர்கள் மலேசியப் பங்குச் சந்தையிலிருந்து வெளியேறுவதற்கான காரணங்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது.