Home One Line P2 கொவிட்19: உலகளவில் 430,000- க்கும் மேற்பட்டோர் மரணம்

கொவிட்19: உலகளவில் 430,000- க்கும் மேற்பட்டோர் மரணம்

806
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரங்களின்படி கடந்த 24 மணி நேரத்தில் உலகளாவிய கொவிட்-19 இறப்பு  சம்பவங்கள் 5,000-ஆக அதிகரித்துள்ளன என்பதைக் காட்டுகிறது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி உலகளாவிய இறப்புகளின் எண்ணிக்கை 431,418 சம்பவங்களை எட்டியுள்ளது.

115,000 சம்பவங்களில் அதிக எண்ணிக்கையிலான இறப்பு எண்ணிக்கை அமெரிக்கா பதிவு செய்துள்ளது.

#TamilSchoolmychoice

பிரிட்டன் மற்றும் பிரேசில் ஆகியவை முறையே 41,000 மற்றும் 42,000 சம்பவங்களை பதிவு செய்துள்ளன. இத்தாலியில் இறந்தவர்களின் எண்ணிக்கை 34,000 ஆகும்.

இதற்கிடையில், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் முறையே 29,000 மற்றும் 27,000 இறப்புகள் பதிவாகியுள்ளன.

மற்ற நாடுகள் இன்னும் 17,000 -க்குட்பட்ட இறப்புகளைப் பதிவு செய்துள்ளன.