கோலாலம்பூர்: பாலர் பள்ளிகளை ஜூலை 1 முதல் மீண்டும் திறக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற சிறப்பு செய்தியாளர்கள் கூட்டத்தில், இது தொடர்பான நிர்ணயிக்கப்பட்ட நடைமுறை கல்வி அமைச்சினால் தாக்கல் செய்யப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையில் கல்வி அமைச்சின் கீழ் உள்ள 6,216 பாலர் பாடசாலைகளும், 7,887 தனியார் பாலர் பள்ளிகளும், தேசிய ஒற்றுமை அமைச்சகத்தின் கீழ் உள்ள 1,781 மழலையர் பள்ளிகளும், ஊராட்சி வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் உள்ள 8,530 மழலையர் பள்ளிகளும் ஈடுபட்டுள்ளன.
எவ்வாறாயினும், திறப்பு குறித்த விரிவான நடைமுறைகள் விரைவில் கல்வி அமைச்சு அறிவிக்கும் என்று அவர் இன்று தெரிவித்தார்.