Home One Line P1 சினி இடைத்தேர்தல்: பெர்சாத்து தொகுதி துணைத் தலைவர் சுயேட்சையாகப் போட்டி

சினி இடைத்தேர்தல்: பெர்சாத்து தொகுதி துணைத் தலைவர் சுயேட்சையாகப் போட்டி

585
0
SHARE
Ad

குவாந்தான்: பெர்சாத்து கட்சியின் பெக்கான் தொகுதி துணைத் தலைவர் தெங்கு டத்தோ சைனுல் ஹிஷாம் தெங்கு ஹுசின், சினி இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவதற்கான தனது விருப்பத்தை அறிவித்தார்.

தொழிலதிபரான 64 வயதான தெங்கு சைனுல் ஹிஷாம், வீடு சின்னத்தைப் பயன்படுத்தி, ‘சினியின் மக்கள் குரலாக மாறுதல்’ என்ற அடையாளத்துடன் போடியில் இறங்கியுள்ளர்.

“இந்த முடிவும் கவனமாக பரிசீலிக்க வேண்டிய விடயமாகும். மேலும் பெர்சாத்து மற்றும் அம்னோ இடையேயான தேசிய கூட்டணியின் ஒத்துழைப்பை கணக்கில் எடுத்துக்கொண்டு, போட்டியிடுவதற்கான எனது உறுதியில் கட்சி எதிர்கொள்ளும் எந்தவொரு நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.

#TamilSchoolmychoice

“ஒரு சுயேட்சை வேட்பாளராக, நான் மக்களுக்கு பெரிய வாக்குறுதிகளை அளிக்க முடியாது, ஆனால், எனக்கு ஆதரவு இருக்கிறது. பெக்கான் குடியிருப்பாளராக, உள்ளூர்வாசிகளிடமிருந்து நான் நீண்ட காலமாக தொடர்பில் இருக்கிறேன்.” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

முன்னதாக, தேசிய முன்னணி தனது வேட்பாளரை அறிவித்திருந்தது. பெக்கான் தொகுதி செயர்பாட்டுக் குழு உறுப்பினர் முகமட் ஷாரின் முகமட் சின் தேசிய முன்னணியைப் பிரதிநிதித்துப் போட்டியிடுகிறார்.

மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தேசிய முன்னணிக்கு எதிராக போட்டியில் இறங்க மாட்டார்கள் என்று தாம் நம்புவதாக அம்னோ பொதுச் செயலாளர் டான்ஸ்ரீ அனுவார் மூசா தெரிவித்திருந்தார்.