Home நாடு ஆபாச வீடியோவில் இருப்பது பாஸ் கட்சித் தலைவர் அல்ல- ஹாடி அவாங்

ஆபாச வீடியோவில் இருப்பது பாஸ் கட்சித் தலைவர் அல்ல- ஹாடி அவாங்

895
0
SHARE
Ad

Hadi-Awang-Sliderகோலாலம்பூர், ஏப்ரல் 13 – இணையத்தளத்தில் உலாவி வரும் ஆபாச வீடியோவில் இருப்பது பாஸ் கட்சியின் தலைவர் அல்ல என்று அந்த கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஹாஜி ஹாடி அவாங் கூறினார்.

“அந்த வீடியோவை எல்லா இடங்களிலும் உலாவ விடுங்கள். அது குறித்து எங்களுக்கு கவலையில்லை.  நாங்கள் இந்த கட்டத்தை எல்லாம் தாண்டி வந்து விட்டோம்.  எங்களைப் பற்றி – எங்கள் கட்சியைப் பற்றி மக்கள் அறிவர்.  அந்த ஆபாச வீடியோவில் இருப்பது எங்கள் கட்சித் தலைவர்  இல்லை என்று நாங்கள் உறுதியாக நம்புவதால்  நாங்கள் அது குறித்து கவலைப்படவில்லை” என்றும் அவர் கூறினார்.

இதன் காரணமாக பாஸ் கட்சி இது பற்றி விவாதிக்க சிறப்புக் கூட்டம் எதனையும் கூட்ட உத்தேசிக்கவில்லை என்றும் ஹாடி அவாங் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் பாஸ் கட்சியின் உதவித் தலைவரான டத்தோ ஹூசாம் மூசா,  இந்த ஆபாச வீடியோ அரசியல் சதி நோக்கம் கொண்டது என்றும், மக்கள் கூட்டணி மீது  வெறுப்பை ஏற்படுத்தபட வேண்டும் என்ற நோக்கில் வெளியிடப்பட்டிருப்பதாகவும்  தெரிவித்தார்.