Home One Line P1 100 ஆண்டுகால ஸ்ரீ மதுரை வீரன் ஆலயம் – 10 நாட்களில் உடைபடும் – கெடா...

100 ஆண்டுகால ஸ்ரீ மதுரை வீரன் ஆலயம் – 10 நாட்களில் உடைபடும் – கெடா பாஸ் அரசாங்கத்தின் முடிவு

1028
0
SHARE
Ad

அலோர்ஸ்டார் – கெடா மாநிலத்தின் ஆட்சியில் அமர்ந்த சில வாரங்களிலேயே பாஸ் தலைமையிலான தேசியக் கூட்டணி புதியதொரு சவாலை எதிர்நோக்கியுள்ளது.

அலோர்ஸ்டாரிலுள்ள 100 ஆண்டுகால பழமைவாய்ந்த ஸ்ரீ மதுரை வீரன் ஆலயத்தை அடுத்த 10 நாட்களில் அகற்ற வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து கெடா இந்து சமூகத்தில் பரவலான கண்டனங்களும் அதிருப்திகளும் எழுந்துள்ளன.

#TamilSchoolmychoice

இதுகுறித்து தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு நேற்று வியாழக்கிழமை அளித்த பேட்டியில் மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் பேச்சு வார்த்தை நடத்த கெடா மாநில மஇகா தொடர்புக் குழுத் தலைவர் டத்தோ ஆனந்தனைப் பணித்திருப்பதாகத் தெரிவித்தார்.

ஸ்ரீ மதுரை வீரன் ஆலயம் சிறிய ஆலயம்தான். எனினும் 100 ஆண்டுகால பழமையும் பாரம்பரியமும் வாய்ந்தது. அலோர்ஸ்டாரின் இரயில் நிலையத்தின் அருகில் ஜாலான் கெரெத்தா அப்பி என்ற இடத்தில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.

அலோர்ஸ்டாரில் இரயில்வே துறையில் பணியாற்றிய இந்தியர்களால் நிர்மாணிக்கப்பட்ட ஆலயம் இதுவாகும்.

இந்த ஆலயத்தின் பொறுப்பாளர்களில் ஒருவரான விஜய் மோகன் சந்திரசேகரன் இது குறித்து தெரிவித்தபோது, கெடா மந்திரி பெசார் தங்களுக்கு ஒரு மாத கால அவகாசம் தந்ததாகத் தெரிவித்தார்.

ஆனால், அலோர்ஸ்டார் மாநகர் மன்றத்தில் இருந்து வந்த கடிதம் அடுத்த 10 நாட்களில் ஆலயத்தை அகற்ற வேண்டும் எனத் தெரிவித்தது என்றும் அவர் மேலும் கூறினார்.

போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் இந்த விவகாரத்தில் தலையிட்டுத் தங்களுக்கு உதவ வேண்டும் எனவும் விஜய் மோகன் சந்திரசேகரன் கோரிக்கை விடுத்ததாக மக்கள் ஓசை நாளிதழின் செய்தி தெரிவித்தது.

இதற்கிடையில் பழமை வாய்ந்த இந்த ஆலயம் உடைபட்டால் கெடா மாநில இந்தியர்களிடையே கடும் அதிருப்தி ஏற்படும். அந்த அதிருப்திகள் ஆளும் தேசியக்கூட்டணி அரசாங்கத்திற்கான எதிர்ப்பு வாக்குகளாக எதிர்வரும் 15-வது பொதுத் தேர்தலில் உருவெடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.