Home One Line P1 டத்தோஸ்ரீ பட்டம் பெற்ற தொழிலதிபர் கடத்திக் கொலை

டத்தோஸ்ரீ பட்டம் பெற்ற தொழிலதிபர் கடத்திக் கொலை

824
0
SHARE
Ad

கோலாலம்பூர்: டத்தோஸ்ரீ பட்டம் பெற்ற தொழிலதிபரின் சடலம் இன்று இங்குள்ள பெஸ்தாரி ஜெயாவின் பத்து 27 ஜாலான் ரவாங்கில் புதரில் கண்டெடுக்கப்பட்டது. அவர் கடத்தல்காரர்களால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

55 வயதான அவரது உடல் இன்று காலை 9 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டதாக சிலாங்கூர் குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் டத்தோ பாட்ஸில் அகமட் தெரிவித்தார்.

ஜூன் 10 அன்று ஜாலான் பெர்சியாரான் பெர்டானா, பண்டார் ஸ்ரீ டாமான்சாரா, பெட்டாலிங் ஜெயா ஆகிய இடங்களில் விளையாட்டு மைதானத்தில் மெது ஓட்டத்தில் இருந்த போது கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

“சம்பவம் நடந்த நாளில் காலை 10.30 மணியளவில் பாதிக்கப்பட்டவர் கடத்தப்பட்டார்.” என்று அவர் ஒரு சுருக்கமான அறிக்கையில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர் பணத்திற்காக கடத்தப்பட்டார் என்று அவர் கூறினார்.