Home One Line P2 கொவிட்19: சிங்கப்பூரில் 215 புதிய சம்பவங்கள் பதிவு

கொவிட்19: சிங்கப்பூரில் 215 புதிய சம்பவங்கள் பதிவு

483
0
SHARE
Ad

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இன்று புதன்கிழமை 10 உள்ளூர் தொற்றுகளுடன் 215 புதிய கொவிட்19 நோய்த்தொற்றுகளைப் பதிவு செய்துள்ளது. இது அக்குடியரசில் கொவிட்19 பாதிப்பின் எண்ணிக்கையை 44,122-ஆக கொண்டு வந்துள்ளது.

சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள சுருக்கமான நண்பகல் தரவுகளின்படி, சமூக சம்பவங்களில் ஆறு சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தர குடியிருப்பாளர்கள் ஆவர்.

மீதமுள்ள புதிய சம்பவங்கள் தங்குமிடங்களில் வசிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

நேற்று பிற்பகுதியில் வெளியிடப்பட்ட அதன் முழு தரவுகளில், சிங்கப்பூரில் 1,879 உள்ளூர் தொற்று, 582 இறக்குமதி செய்யப்பட்ட சம்பவங்கள் மற்றும் 41,446 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் என்று வகைப்படுத்தியுள்ளது.

நேற்று நண்பகல் நிலவரப்படி, மொத்தம் 43,907 நோயாளிகளில் 38,500 அல்லது 88 விழுக்காட்டு பேர் முழுமையாக குணமடைந்து மருத்துவமனைகள் அல்லது சமூக பராமரிப்பு வசதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

நேற்று வரையிலும் மருத்துவமனையில் 215 உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் உள்ளதாகவும். அவற்றில் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.