Home One Line P1 தேசிய தினக் கொண்டாட்ட அணிவகுப்பு நடைபெறாது

தேசிய தினக் கொண்டாட்ட அணிவகுப்பு நடைபெறாது

1160
0
SHARE
Ad

புத்ராஜெயா: கொவிட் 19 தொற்றுநோய் காரணமாக இந்த ஆண்டு தேசிய தினக் கொண்டாட்டத்தின் அணிவகுப்பு நடைபெறாது என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ஆகஸ்ட் 31- ஆம் தேதி கொண்டாட்டம் தொடர்பான பிற நிகழ்ச்சிகள் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளுடன் நடைபெறலாம் என்று அவர் கூறினார்.

“இப்போதைக்கு அணிவகுப்பு இருக்காது. இந்த நிகழ்ச்சியில் பெரிய கூட்டங்கள் சம்பந்தப்படும். ஆயிரக்கணக்கானவர்களை உள்ளடக்கியிருப்பதால் நாங்கள் அதை நடத்த திட்டமிடவில்லை.

#TamilSchoolmychoice

“கூடல் இடைவெளி, குறிப்பாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் மத்தியில், நடைமுறைக்கு வருவது கடினம்.

“எனவே, இப்போதைக்கு, தேசிய தினத்திற்கான பெரிய கொண்டாட்டங்கள் அல்லது அணிவகுப்புகளுக்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை,” என்று அவர் இன்று புதன்கிழமை கூறினார்.

அணிவகுப்பைத் தவிர்த்து, தேசிய தினத்துடன் இணைந்து நடைபெறும் பிற நிகழ்ச்சிகளை பல்லூடக மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் அறிவிப்பார் என்று இஸ்மாயில் மேலும் கூறினார்.

“டத்தோஸ்ரீ சைபுடின் அப்துல்லா தேசிய தின கொண்டாட்டம் தொடர்பான திட்டங்களுக்கு பின்பற்ற வேண்டிய விவரங்களையும், நடைமுறைகளையும் அறிவிப்பார். ” என்று அவர் கூறினார்.