Home One Line P1 எதிர்க்கட்சித் தலைவராக அன்வார் இப்ராகிம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்

எதிர்க்கட்சித் தலைவராக அன்வார் இப்ராகிம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்

418
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் முகமட் அரிப் முகமட் யூசோப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

“போர்ட் டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினரான அன்வார் இப்ராகிம் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கிறேன். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவை அவர் பெற்றிருப்பதில் திருப்தி அடைகிறேன் என்பதை நான் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். ” என்று அவர் கூறினார்.

கொவிட் 19 பாதித்ததைத் தொடர்ந்து, நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போக்கை புதிய விதிமுறைக்கு உட்பட்டு செய்ய வேண்டும் என்று அரிப் கூறினார்.

#TamilSchoolmychoice

“இதேபோல் மக்களவையில், நாடாளுமன்ற உறுப்பினர்களும் புதிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும், எப்போதும் கூடல் இடைவெளிக்கு கட்டுப்பட வேண்டும்.

“மேலும், மக்களவையில் 60 வயதிற்கு மேற்பட்ட 87 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் நிச்சயமாக தொற்று பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர். ” என்று அவர் கூறினார்.