Home One Line P1 ஊக்கத்திட்டங்களை அறிவிப்பதற்கு முன்பதாக நாடாளுமன்றம் கூடாததை மொகிதின் தற்காத்தார்

ஊக்கத்திட்டங்களை அறிவிப்பதற்கு முன்பதாக நாடாளுமன்றம் கூடாததை மொகிதின் தற்காத்தார்

417
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மக்களவையில் முதலில் தாக்கல் செய்யப்படாமல் கொவிட் -19 தொற்றுநோயின் விளைவுகளை நிவர்த்தி செய்யும் முயற்சியில், ஒதுக்கீட்டை அறிவிக்க தேசிய கூட்டணி அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டி இருந்ததாக பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்தார்.

கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டுள்ளதால் மக்களுக்கு உடனடி உதவி தேவைப்பட்டது என்றும், நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கும் வரை காத்திருக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

“கொவிட்-19- ஐ நிர்வகிப்பது, கையாள்வதே எங்களுக்கு உள்ள மிகப்பெரிய பிரச்சனை. இந்த கடினமான சூழ்நிலையில் அரசாங்கத்திற்கு வேறு வழியில்லை என்பதை மக்கள் அறிவார்கள். உண்மையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கவில்லை என்றாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நான் தனிப்பட்ட முறையில் நினைக்கிறேன்.” என்று அவர் இன்றைய நாடாளுமன்ற கேள்வி பதில் அங்கத்தில் கூறினார்.

#TamilSchoolmychoice

கொவிட்-19 பாதிப்புக்குள்ளான நாட்டின் பொருளாதார மீட்சி உட்பட அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட முக்கிய விதிகளை பகிரங்கமாக விவாதிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏன் இடம் கொடுக்கப்படவில்லை என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அளித்த கூடுதல் கேள்விகளுக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.