Home One Line P1 நாடாளுமன்ற அமர்வு காலை 10 மணிக்குத் தொடங்கியது!

நாடாளுமன்ற அமர்வு காலை 10 மணிக்குத் தொடங்கியது!

370
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று தொடங்கும் 14- வது நாடாளுமன்றத்தின், இந்த ஆண்டுக்கான இரண்டாவது கூட்டத்தின் முதல் நாளில் இன்று கூடியிருக்கும் மக்களவை, சபாநாயகர் டான்ஸ்ரீ முகமட் அரிப் முகமட் யூசோப் மற்றும் அவரது துணைத் தலைவர் இங்கா கோர் மிங் ஆகியோரை நீக்க வேண்டும் என்ற முக்கியத் தீர்மானம் குறித்து கவனம் செலுத்தும்.

பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் முன்னாள் தேர்தல் ஆணையத் தலைவர் டத்தோ அசார் அசிசான் ஹருணை சபாநாயகராகவும், பெங்கேராங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அசாலினா ஓத்மானை துணை சபாநாயகராகவும் நியமிக்க தீர்மானம் கொண்டு வரப்படிருக்கிறது.

14- வது நாடாளுமன்றத்திற்கான நாடாளுமன்ற தேர்வுக் குழுவில், ஆறு மக்களவை உறுப்பினர்களை நியமிக்க பிரதமர் முன்மொழிவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

நாடாளுமன்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி (கோம்பாக்); டத்தோஸ்ரீ ஹம்சா சைனுடின் (லாருட்); டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமிடி (பாகான் டத்தோ); டத்தோஸ்ரீ பாடில்லா யூசோப் (பெத்ரா ஜெயா); டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் (மாராங்) மற்றும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் (போர்ட் டிக்சன்) ஆகியோரை பிரதமர் நியமிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 10 மணிக்கு நாடாளுமன்ற அமர்வு தெடங்கியது.

மே 18 அன்று ஒரு நாள் நடைபெற்ற முதல் கூட்டத்தில் மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடினின் தொடக்க உரை மட்டுமே இடம்பெற்றது.