கோலாலம்பூர்:(மதியம் 12.00 மணி நிலவரம்) நாடாளுமன்ற சபாநாயகர் முகமட் அரிப் முகமட் யூசோப்பை நீக்கத் தீர்மானம் கொண்டு வரப்பட்டதை அடுத்து நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டு வருகிறது.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் தியோ இந்த விவகாரத்தை விளக்கி கேள்விகள் தொடுத்தார். அவைத் தலைவருக்கான பதவி காலியானால் மட்டுமே புதிய அவைத் தலைவர் நியமிக்கப்படும் வேண்டும் என நாடாளுமன்றச் சட்டங்கள் கூறுகின்றன. எனவே, பதவி காலியாகாத நிலையில் புதிய அவைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பது சட்டப்படி செல்லாது என கோபிந்த் சிங் வாதிட்டார்.
எனினும் இதற்கு துணை சபாநாயகர் பதில் கூற மறுத்து விட்டார். விவாதத்திற்கு அவை உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிப்பதாகக் கூறினார். இதற்கு எதிர்கட்சித் உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க அமளி ஏற்பட்டது.
வாக்கெடுப்புக்கு முன்னர் விவாதங்களுக்கு அதிக நேரம் வழங்க வேண்டும் என்றும் அன்வார் இப்ராகிம் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.