Home One Line P1 “பிரதமர் அவைத் தலைவரை மாற்ற முடியாது” மகாதீர்

“பிரதமர் அவைத் தலைவரை மாற்ற முடியாது” மகாதீர்

337
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நாடாளுமன்ற அவைத் தலைவர் முகமட் அரிப்பை அகற்றுவதற்காக  பிரதமர் மொகிதின் யாசின் கொண்டு வந்திருக்கும் தீர்மானம் மீது லங்காவி நாடாளுமன்ற உறுப்பினர் துன் மகாதீர் தனது வாதங்களை முன்வைத்தார்.

நாடாளுமன்ற அவைத் தலைவர் ஒருவரை அகற்றுவதற்கு பிரதமருக்கு உரிமை கிடையாது என்று மகாதீர் கூறினார். “அவைத் தலைவர் என்பவர் இறந்துவிட்டாலோ, அல்லது செயல்பட முடியாமல் நோய்வாய்ப்பட்டாலோ, மட்டுமே அவரை மாற்ற முடியும். எனக்குத் தெரிந்து பிரதமர் ஒருவர் தீர்மானம் கொண்டுவருவதன் மூலம் அவைத் தலைவரை மாற்றலாம் என்பதற்கு சட்ட ரீதியான காரணங்கள் இல்லை” என்றார் மகாதீர்.

இதற்கிடையில், தீர்மானத்திற்கு ஆதரவாகப் பேசிய தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் கொண்டுவந்த தீர்மானம் அவைத் தலைவராலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதால் அதுகுறித்த சட்டப் பிரச்சனைகளை எழுப்ப முடியாது என வாதிட்டனர். எனவே தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென அவர்கள்  தங்களின் உரைகளில் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

நாடாளுமன்ற விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

(மேலும் விவரங்கள் தொடரும்)