Home One Line P1 சிலாங்கூர் மாநில சட்டமன்ற புதிய துணை சபாநாயகராக ஹஸ்னுல் பஹாருடின் பதவி ஏற்பு

சிலாங்கூர் மாநில சட்டமன்ற புதிய துணை சபாநாயகராக ஹஸ்னுல் பஹாருடின் பதவி ஏற்பு

449
0
SHARE
Ad
படம்: மாநில சட்டமன்ற உறுப்பினர் ஹஸ்னுல் பஹாருடின்

ஷா அலாம்: சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் புதிய துணை சபாநாயகராக மோரிப் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஹஸ்னுல் பஹாருடின் இன்று பதவியேற்றார்.

பிகேஆர் கட்சியிலிருந்து விலகி சுயேச்சை சட்டமன்ற உறுப்பினரான டாக்டர் டராயா அல்வியின் இடத்தினை ஹஸ்னுல் ஏற்றுள்ளார்.

சபாநாயகர் எங் சூ லிம் முன்னிலையில் ஹஸ்னுல் பதவியேற்றார். இன்று முதல் ஜூலை 24 வரை மாநில சட்டமன்றம் அமர திட்டமிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

புதிய துணை சபாநாயகராக ஹஸ்னுலின் பெயர் முன்மொழியப்பட்டபோது 56 மாநில சட்டமன்ற உறுப்பினர்களும் ஆட்சேபணை தெரிவிக்கவில்லை.

பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத்தலைவர் அஸ்மின் அலியின் தரப்புக்கு ஆதரவாக டராயோ அண்மையில் விலகினார்.

டராயோ அல்வி பிகேஆர் கட்சியின் மகளிர் பிரிவின் துணைத் தலைவருமாவார்.

56 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட சிலாங்கூர் மாநிலத்தில் நம்பிக்கை கூட்டணி இன்னும் 42 சட்டமன்றத் தொகுதிகளைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றது.