புத்ரா ஜெயா : நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் சட்டத் துறைத் தலைவர் டான்ஸ்ரீ இட்ருஸ் ஹாருண் மலேசியாகினி ஊடகம் மீது தொடுத்திருந்த வழக்கின் விசாரணை இன்று திங்கட்கிழமை (ஜூலை 13) காலையில் கூட்டரசு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்கின் முடிவில் நீதிபதிகள், வழக்கில் முன்வைக்கப்பட்ட வாதப் பிரதிவாதங்களைப் பரிசீலனை செய்யவும், அதன் மீது முடிவெடுக்கவும் தங்களுக்கு கால அவகாசம் தேவைப்படுவதாகக் கூறினர்.
தீர்ப்பிற்கான தேதி பின்னர் நிர்ணயிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த வழக்கை 7 கூட்டரசு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கிறது. இந்த அமர்வுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரோஹானா யூசோப் (படம்) தலைமை வகித்தார்.