Home அரசியல் பொதுத்தேர்தலில் முருகேசன் போட்டியிடவில்லை?

பொதுத்தேர்தலில் முருகேசன் போட்டியிடவில்லை?

674
0
SHARE
Ad

indexகோலாலம்பூர், ஏப்ரல் 15- ம.இ.கா.வின்  தேசிய பொதுச் செயலாளர் எஸ்.முருகேசன் வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் அவர் இந்த தேர்தலில் இருந்து விலகி கொள்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ம.இ.கா.வில்  நிலவும் இழுபறி காரணமாக அவர் இத்தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று கூறப்பட்டுவரும் நிலையில், அவரிடம் தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்று கேட்டபோது அது கட்சி தலைவர் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.

கடந்த பொதுத்தேர்தலில் சுபாங் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட டத்தோ முருகேசன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சிவராசாவிடம் 6,700 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

#TamilSchoolmychoice

இம்முறை சுங்கை சிப்புட் தொகுதியில் போட்டியிடுவார் என்று முதலில் கூறப்பட்டது. பின்  தெலுக் கெமாங் தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் தற்போது முருகேசனுக்கு அத்தொகுதியும் இல்லை என்று உறுதியாகியுள்ளது.

கடந்த பொதுத்தேர்தலில் முருகேசன் போட்டியிட்ட சுபாங் தொகுதியில் இம்முறை ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் துணைத்தலைவர் பிரகாஷ் ராவ் வேட்பளராக நிறுத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.