Home One Line P1 புதியக் கட்சியின் கீழ் போட்டியிடுவோம்!- துன் மகாதீர்

புதியக் கட்சியின் கீழ் போட்டியிடுவோம்!- துன் மகாதீர்

429
0
SHARE
Ad

கோலாலம்பூர்: திடீர் தேர்தல் நடத்தப்பட்டால், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் புதிய அரசியல் கட்சியின் கீழ் போட்டியிடக்கூடும் என்று தெரிவித்துள்ளார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் இணைவர்.

அந்த தேர்தலில் அவர் தொடர்ந்து பிரச்சாரம் செய்வார் என்று அவர் குறிப்பிட்டார். ஆயினும், தாம் அதில் ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்கப்போவதில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

“நான் அந்த நேரத்தில் நான் வயதகி இருப்பேன். நான் அநேகமாக ஓரமாக இருந்து உதவுவேன். மற்றவர்களுக்கு உதவுவேன், எனது சொந்தக் கட்சி போட்டியிட உதவுவேன். நாங்கள் சில இடங்களைப் பெற முடியும்.

#TamilSchoolmychoice

“ஆனால், எனது சொந்தக் கட்சி (பெர்சாத்து) இப்போது இரண்டாகப் பிரிந்துள்ளது. ஒரு பகுதி அரசாங்கத்துடனும், மற்ற பகுதி என்னுடனும் இருக்கிறது. கட்சி சார்பாக நான் போட்டியிட முடியாது என்பதை உறுதிப்படுத்த அவர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள்.

“எனவே, நாங்கள் வெவ்வேறு கட்சி பெயர்களுடன் போட்டியிடக்கூடிய வாய்ப்பை எதிர்கொள்கிறோம். ஒரு புதிய கட்சியாக இருக்கலாம். எனவே இந்த நேரத்தில் நிலைமை மிகவும் நிச்சயமற்றது” என்று அவர் கூறினார்.

மே மாதத்தில், மகாதீரும் அவரது நான்கு ஆதரவாளர்களும் பெர்சாத்து கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

மகாதீருடன் பக்கபலமாக இருந்த இந்த பெர்சாத்து தலைவர்களும், மே 18 மக்களவை அமர்வின் போது சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்களாக அமர்ந்தனர்.

மேலும் கருத்து தெரிவித்த துன் மகாதீர், அடுத்த பொதுத் தேர்தலில் பெர்சாத்து மோசமாகத் தோற்கும் என்ற தனது கணிப்பை மீண்டும் வலியுறுத்தினார்.

“எங்கள் சொந்தக் கட்சி, அரசாங்கத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ளது. எங்கள் முந்தைய கூட்டணியின் (நம்பிக்கைக் கூட்டணியின்) ஆதரவை நாங்கள் இழந்துவிட்டோம். மேலும், அம்னோ மற்றும் புதிய கூட்டணியின் அனைத்து (கட்சிகளிடமிருந்தும்) எங்களுக்கு ஆதரவு கிடைக்கவில்லை.

“எனவே, கட்சியின் செயல்திறன் மிகவும் மோசமாக இருக்கும்” என்று அவர் ஒரு நேர்காணலின் போது கூறினார்.

கடந்த பிப்ரவரியில், பெர்சாத்து நம்பிக்கைக் கூட்டணியை விட்டு வெளியேறியது. அதன் பிறகு, அம்னோ, பாஸ், ஜிபிஎஸ், பிபிஎஸ் மற்றும் ஸ்டார் ஆகியவற்றுடன் தேசிய கூட்டணி அரசாங்கத்தை உருவாக்கியது.