கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் தம்மை தேசிய கூட்டணி அரசாங்கத்தின் துணைப் பிரதமர் பதவியை வகிக்க அழைத்ததாக ஷாபி அப்டால் தெரிவித்தார்.
“அவரிடமே கேளுங்கள்.” என்று அவர் கூறினார்.
தேசிய கூட்டணியை பலப்படுத்த வாரிசானின் ஆதரவு வேண்டும் என்று மொகிதின் தம்மிடம் பேசியதை அவர் குறிப்பிட்டார்.
“அவர் என்னிடம் அதனை கூறவில்லை. ஆனால், இந்த விவகாரம் எனக்குத் தெரியும்,” என்று அவர் மேலும் கூறினார்.
தேசிய கூட்டணி ஆட்சி அமைத்த இரண்டு வாரத்திற்குப் பிறகு தம்மை அவர் அழைத்ததாக ஷாபி கூறினார்.
“அப்போது அவர் பிரதமராக இருந்தார். சில வாரங்களுக்குப் பிறகு எனக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினார். இதுதான் நாம் பேசுவதற்கான சரியான நேரம்,” என்று அவர் கூறினார்.
ஆயினும், தாம் இது அரசாங்கங்களுடனான பேச்சுவார்த்தையாக இருக்க விரும்புவதாக ஷாபி தெரிவித்தார். இது வெறும் தேசிய கூட்டணி இணைப்பாக இருக்க தாம் விரும்பவில்லை என்று அவர் கூறினார்.