ஹாங்காங்: டிஸ்னிலேண்ட் ஹாங்காங் திறக்கப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு மீண்டும் மூடப்பட்டது.
அண்மையில், கொவிட்19 சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து ஹாங்காங் தனது கூடல் இடைவெளி நடவடிக்கைகளை ஹாங்காங் கடுமையாக்கியது. அதன் பின்னர் ஜூன் 18 அன்று மீண்டும் திறக்கப்பட்ட இந்த பூங்கா சம்பவங்கள் அதிகரிப்பினால் மூடப்பட்டது.
“கொவிட்19- ஐ தடுப்பதற்கான அரசாங்க உத்தரவுகளுக்கு இணங்க, டிஸ்னிலேண்ட் ஹாங்காங் பூங்கா ஜூலை 15 முதல் தற்காலிகமாக மூடப்படும்” என்று டிஸ்னி செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
இருப்பினும், டிஸ்னிலேண்ட் ஹாங்காங் ரிசார்ட்ஸில் உள்ள தங்கும் விடுதிகள் தேவைக்கேற்ப திறந்திருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
“கூடல் இடைவெளி, மேம்பட்ட சுகாதாரம் போன்ற அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க சிறந்த சுகாதார, பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும்” என்று அவர் மேலும் கூறினார்.