Home One Line P1 4 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன

4 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன

512
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட்19 தொற்றுநோயால் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை பின்பற்றி நான்கு மாதங்களுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டன.

பல மாத விடுமுறைக்கு பிறகு, புதிய இயல்பு நிலையின் கீழ், பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன.

நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு இணங்க பள்ளி திறப்பு சுமூகமாக நடைபெற்றது.

#TamilSchoolmychoice

படிவம் ஒன்று முதல் நான்கு மாணவர்கள், ஐந்தாம், ஆறாம் ஆண்டு மாணவர்கள் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, முகக்கவசவங்கள் அணிந்திருக்கிறார்களா என்று சரிபார்க்கப்பட்டது.

உடல் வெப்பநிலை சரிபார்க்கப்பட்டு, கைத்தூய்மி ஆகியவற்றை பயன்படுத்தவும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக பெர்னாமா மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியின் நுழைவாயில் வரை அனுப்ப மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதற்கிடையில், 1- ஆம் ஆண்டு முதல் 4- ஆம் ஆண்டு வரையிலான மாணவர்கள் ஜூலை 22- ஆம் தேதி பள்ளிக்குச் செல்லத் தொடங்குவர்.

மலேசிய கல்வி அமைச்சில் பதிவு செய்யப்பட்ட அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் ஜூலை 15 முதல் திறக்கப்படும் என்று அண்மையில் கல்வி அமைச்சர் முகமட் ராட்சி முகமட் ஜிடின் கூறியிருந்தார்.

“மீண்டும் பள்ளி திறக்கும் தேதி கல்வி அமைச்சில் பதிவு செய்யப்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்தும்.” என்று அவர் தெரிவித்திருந்தார்.