கோலாலம்பூர்: தற்போதைய காரணிகளுக்கு ஏற்ப, மக்களிடையே வறுமையை ஒழிக்கும் முயற்சியில் அரசாங்கம் பல்வேறு புதிய உத்திகள், வழிமுறைகளை வகுக்க உள்ளது.
இது குறித்து கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டான்ஸ்ரீ அன்வார் மூசா தெரிவித்தார்.
12- வது மலேசியா திட்டம் மூலம் பொருத்தமான கொள்கைகள், திட்டங்களை வகுப்பதற்கான முயற்சிகள் செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
மேலும், வறுமைக் கோடு வருமான வரம்பை (பிஜிகே) 980 ரிங்கிட் முதல் 2,208 ரிங்கிட் வரை மாற்றியமைத்ததைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்படவுள்ள வருடாந்திர வரவு செலவுத் திட்டம் ஆகியவை இந்த நடவடிக்கையில் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
“அதிகமான குடும்பங்களை உள்ளடக்கிய வறுமை ஒழிப்பு திட்டத்தை மேற்கொள்வதற்கு அரசாங்கம் அதிக பொறுப்பை எடுக்கும்” என்று செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
இது தொடர்பாக, ஏழை மற்றும் தகுதியான குடும்பங்களைச் சேர்ந்தவர்களை அரசாங்கம் அடையாளம் காணும் என்று அவர் கூறினார்.