புது டில்லி: இந்தியாவில் கொவிட்19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 968,835-ஆக பதிவாகி உள்ளது.
இந்த தொற்றிலிருந்து மீட்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை ஆறு இலட்சத்தை எட்டியுள்ளது.
கடந்த பதினைந்து நாட்களில் தினசரி பதிவுகளில் ஒரு தனித்துவமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
முதன்முறையாக புதன்கிழமை 32,498 புதிய சம்பவங்கள் பதிவாகி உள்ளன. இந்தியா தனது அதிகபட்ச தினசரி 615 உயிரிழப்புகளையும் பதிவு செய்தது.
இந்த அதிகரிப்பு கவலைக்குரிய சமிக்ஞையாகும்.
ஜூன் மாதத்தில் கொவிட் சம்பவங்களின் எண்ணிக்கை 400,413 ஆக இருந்தது.
ஜூலை முதல் பதினைந்து நாட்களில் மட்டும் இந்த எண்ணிக்கை நான்கு இலட்சத்திற்கு அருகில் 383,361- ஆக பதிவாகி இருந்தது.
செயலில் உள்ள சம்பவங்களின் எண்ணிக்கையிலும் இதே போக்கு காணப்பட்டது. இருப்பினும், ஜூன் மாதத்தில் பதிவான கிட்டத்தட்ட 12,000 இறப்புகளுடன் ஒப்பிடும்போது, ஜூலை முதல் 15 நாட்களில் 7,468 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இறப்பு விகிதத்தில் இது வீழ்ச்சியை பிரதிபலிக்கிறது.
புதன்கிழமை, கர்நாடகா (3,176 புதிய சம்பவங்கள்), ஆந்திரா (2,431), கேரளா (623), குஜராத் (925), கோவா (198), மேற்கு வங்கம் (1589) மற்றும் ராஜஸ்தானில் ( 866) சம்பவங்கள் பதிவாகின.
மகாராஷ்டிரா, டில்லி, தமிழ்நாடு மற்றும் குஜராத்திலும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
தமிழகத்தில் வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 102,310 ஆக உள்ளது.
தற்போது தமிழகத்தில் தொற்று சம்பவங்கள் 1.5 இலட்சத்தை எட்டியுள்ளது. நேற்று மட்டும், 4,496 புதிய சம்பவங்களைப் பதிவு செய்து, சம்பவங்களின் எண்ணிகையை 151,820- ஆக உயர்த்தியுள்ளது.