Home One Line P1 கொவிட்19: கட்டாயத் தனிமைப்படுத்தலை ஏற்படுத்தவும்!- நஜிப்

கொவிட்19: கட்டாயத் தனிமைப்படுத்தலை ஏற்படுத்தவும்!- நஜிப்

517
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இறக்குமதி செய்யப்பட்ட கொவிட்19 சம்பவங்களின் தனிமைப்படுத்துதல் விதிமுறைகள் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும்.

தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறைகள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்தார்.

அவர்கள் வெளிநாடுகளிலிருந்து வந்ததும், அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தப்படுவதும், மீறினால் 1,000 ரிங்கிட் அபராதம் விதிப்பதும் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தும் கட்டணத்தைச் செலுத்த முடியும் என்று நினைக்கிறேன். 14 நாட்கள் அவர்கள் மீண்டும் தங்கும் விடுதிகள் அல்லது பிரத்தியேக தனிமைப்படுத்தும் மையங்களில் இருக்க வேண்டும்.

“அவர்களை கட்டணத்தைச் செலுத்த விடுங்கள்.

“வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை முக்கிய சந்தேக நபராகப் பார்க்க வேண்டும். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும். ” என்று அவர் கூறினார்.

தனிமைப்படுத்தும் விவகாரத்தில் தளர்வினை மேற்கொண்ட ஆஸ்திரேலியா நாட்டினை நஜிப் மேற்கோள் காட்டினார்.

அங்கு இரண்டாம் அலை ஏற்பட்டு நிலைமையை மோசமடையச் செய்துள்ளது. கட்டாயத் தனிமைப்படுத்தல் மேற்கொள்ளப்படாமல் இருந்தால், மூன்றாம் அலையை நாம் சந்திக்க நேரிடும் என்று நஜிப் கூறினார்.

“மலேசியர்கள் கண்டிப்பாக ஆஸ்திரேலியாவில் நடந்ததைப் போல, இங்கு நடக்க விரும்பமாட்டார்கள்.

“மேலும் ஆறு வாரங்கள் நடமாட்டக் கட்டுப்பாடுகளை மலேசியர்கள் சந்திக்கத் தயாராக இருக்க மாட்டார்கள்.

“பொருளாதார ரீதியாகவும் நாம் பெரும் பாதிப்பை எதிர்கொள்வோம். ” என்று அவர் தமது முகநுல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.