Home One Line P1 கடன் தள்ளுப்படிக்கான காலக்கெடுவை 6 மாதம் நீட்டிக்க வேண்டும்!

கடன் தள்ளுப்படிக்கான காலக்கெடுவை 6 மாதம் நீட்டிக்க வேண்டும்!

427
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: வணிகங்களையும் வேலைகளையும் காப்பாற்றுவதற்காக, கடன் தள்ளுபடிக்கான காலக்கெடுவை இன்னும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும்.

இதன் மூலமாக கடன் பெற்றவர்கள், வணிகங்களையும் காப்பாற்ற முடியும் என்று முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.

“ஜப்பான் செய்ததைப் போல இன்னும் ஆறு மாதங்களுக்கு அரசாங்கம் கடன் தள்ளுபடி காலக்கெடுவை நீட்டிக்கும் என்று நாங்கள் (எதிர்க்கட்சி) நம்புகிறோம். மற்ற விஷயங்கள் இருந்தாலும் இதை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

பொருளாதாரத்தையும் மக்களையும் புதுப்பிக்க நிதி வாழ்வாதாரங்கள் முக்கியம் என்று அவர் கூறினார்.

மார்ச் 25- ஆம் தேதி, பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் செப்டம்பர் 30- ஆம் தேதியுடன் முடிவடையும் கடன் தள்ளுபடி காலக்கெடுவை அறிவித்தார்.

கொவிட்19 தொற்றுநோயால் மலேசியா கடுமையாக பாதிக்கப்பட்டதால், வணிகத் துறை, தனிநபர்களுக்கு உதவ இந்த நடவடிக்கை தேவைப்பட்டது.

கொவிட்19 தொற்றை கட்டுப்பாட்டில் கொண்டுவர மார்ச் 18 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலக் கட்டத்தில் இருந்து, மலேசியா இப்போது தொற்றுநோயை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடி வருகிறது.