Home One Line P1 ‘அடிமட்டத்தில் எனக்கு இன்னும் ஆதரவு உண்டு’!- மகாதீர்

‘அடிமட்டத்தில் எனக்கு இன்னும் ஆதரவு உண்டு’!- மகாதீர்

464
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தமக்கு இன்னமும் கட்சியின் அடிமட்டத்திலிருந்து ஆதரவு இருப்பதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

தாம் கட்சியில் ஓர் உறுப்பினர் என்றும், பிரதமர் மொகிதின் யாசின் தம்மை நீக்கியிருந்தாலும், தமக்கு ஆதரவு இருப்பதாகவும் அவர் கூறினார்.

“பொதுவாகவே பெர்சாத்து உறுப்பினர்கள் எனக்கு ஆதரவு அளிக்கிறார்கள். அவர்கள் என்னை நம்புகிறார்கள்.
“நாங்கள் இன்னும் கட்சி உறுப்பினர்கள் என்று நம்புகிறோம். மொகிதின் விருப்பப்பட்டால் யாரை வேண்டுமானாலும் நீக்குவார்.

#TamilSchoolmychoice

“இதனை செய்ய முடியாது. இது கட்சியின் அரசியலமைப்பிற்கு எதிரானது. ஆகவே, நான் இன்னமும் கட்சியின் உறுப்பினர். நீதிமன்றத்தில் முடிவு செய்வோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“கட்சி அரசியலமைப்பில், தலைவர், அவைத்தலைவருடன் கலந்துப் பேச வேண்டும். அதாவது என்னுடன். ஆனால், அவர் என்னை நீக்கினார். கட்சியின் பொதுச் செயலாளரையும் என்னைக் கேட்காமால் நீக்கினார்” என்று அவர் கூறினார்.

ஆனால், தொகுதித் தலைவர்களை மொகிதின் தமக்கு ஆதரவு அளிக்குமாறு வற்புறுத்தினார்.

இதனால், பெரும்பாலான தொகுதித் தலைவர்கள் மொகிதினை ஆதரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது என்று மகாதீர் குறிப்பிட்டார்.

“நீங்கள் அவருக்கு ஆதரவாக இல்லை என்றால், அவர் உங்களை நீக்கி விடுவார். அவரது ஆதரவாளர்களை பதவியில் அமர்த்துவார்

“ஆனால், அதிகமானவர்கள் முந்தைய பெர்சாத்துவை எதிர்ப்பார்க்கிறார்கள். அவர்களுக்கு எந்தவொரு சன்மானங்களும் கொடுக்கப்படவில்லை. அவர்களின் எண்ணிக்கையும் அதிகம். அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்ல. பெர்சாத்துவின் முக்கிய நோக்கத்தை செயல்படுத்த வேண்டும், அதாவது அம்னோவை எதிர்ப்பது

“இப்போது நாம் தலைவர் இல்லாமல் தொடர வேண்டும்” என்று டாக்டர் மகாதீர் கூறினார்.

கடந்த சனிக்கிழமை அலோர் ஸ்டாரில் நடைபெற்ற ‘பெர்சாத்து இருட்டடிப்பு’ நிகழ்ச்சியில் தமக்கு ஆதரவு இருப்பதை நிரூபித்துள்ளதாக துன் மகாதீர் கூறினார்.

“அவர்கள் தலைவர்கள் இல்லையென்றாலும், நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். 800 பேர் மண்டபத்தில் இருந்தனர்.

“அந்த மண்டபத்தில் 2,000 பேர் அமர முடியும், ஆனால், கூடல் இடைவெளியைக் கருத்தில் கொண்டு 800 பேரை மட்டுமே நாங்கள் அனுமதித்தோம்.

“வெளியில் நிறைய பேர் இருந்தனர். இயங்கலை வாயிலாக 17,000 பேர் இந்த கூட்டத்தைக் கண்டனர்.” என்று அவர் மேலும் கூறினார்.