Home One Line P1 1.69 பில்லியன் செலுத்த நஜிப்புக்கு நீதிமன்றம் உத்தரவு

1.69 பில்லியன் செலுத்த நஜிப்புக்கு நீதிமன்றம் உத்தரவு

589
0
SHARE
Ad

கோலாலம்பூர்: டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் கூடுதல் வருமான வரித் தொகையான 1.69 பில்லியன் ரிங்கிட் பணத்தை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

“வாதி கோரிய தொகைக்கு, பிரதிவாதிக்கு எதிராக ஆவண அடிப்படையிலான தீர்ப்பை வழங்குவது தவிர வேறு வழியில்லை.

“வாதியின் கூற்று அறிக்கையில் உள்ளதைப் போலவே வாதி கோரிய தொகைக்கு பிரதிவாதிக்கு எதிராக ஆவண அடிப்படையிலான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது. இது 1,692,872,924.83 ஆகும் ரிங்கிட்டாகும்,” என்று நீதிமன்றம் புதன்கிழமை இங்கு கூறியது.

#TamilSchoolmychoice

மேலும், இந்த வழக்குத் தொடர்பாக 15,000 ரிங்கிட் செலவுத் தொகையை செலுத்தவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

2019 ஜூன் 25 அன்று, உள்நாட்டு வருமானவரி வாரியம் மூலம், நஜிப் ரசாக் மீது மொத்தம் 1,692,872,924.83 ரிங்கிட் கட்டணம் செலுத்தக் கோரி அரசாங்கம் வழக்குத் தாக்கல் செய்திருந்தது.

வரி செலுத்த நஜிப்புக்கு 60 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டதாகவும், ஆனால் அவ்வாறு செய்யத் தவறிவிட்டதாகவும் அது கூறியுள்ளது.